Saturday, May 1, 2010

தமிழகமெங்கும் ஒரு கோடி மரக்கன்று நட ஈஷாவுடன் பிரான்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்

செய்தி நாள்: 01-மே-2010

பிரான்ஸ் நிறுவனமான 'ஈவ்ஸ் ரோச்சர்' குழுமம், ஈஷா அறக்கட்டளைக்கு, ஒரு கோடி மரக்கன்றுகளுக்கான உதவித்தொகையை நேற்று வழங்கியது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

நடப்பாண்டு உலகெங்கும் பல்லினத் தாவரங்களுக்கான ஆண்டாக கொண்டாடப்படுகிறது. பிரான்ஸ் நிறுவனமான 'ஈவ்ஸ் ரோச்சர்' குழுமம் ஈஷா அறக்கட்டளைக்கு ஒரு கோடி மரக்கன்றுகளை அளிக்க முன் வந்துள்ளது. இந்த குழுமம் ஐ.நா.வின் உலகளாவிய திட்டமான 'பூமியின் நலனுக்காக மரம் நடுங்கள்' என்ற திட்டத்தின் கீழ் உலகெங்கும் பல நாடுகளில் மரக்கன்றுகள் நட்டு வருகிறது. மேலும் 2010ம் ஆண்டு பாலினத் தாவரங்களின் ஆண்டாக கொண்டாடப்படுவதால் 'ஈவ்ஸ் ரோச்சர்' குழுமம், ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று ஈஷாயோக மையத்தில் நடந்தது.

ஒப்பந்தத்தில், பசுமைக்கரங்கள் திட்ட இயக்குநர் சேகர், ஈவ்ஸ் ரோச்சர் குழும இயக்குநர் ஆரிலியா கேரி ஆகியோர் கையெழுத்திட்டனர். மரக்கன்றுகளை நட ஈவ்ஸ் ரோச்சர் குழுமம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட திட்டமிட்டுள்ளது.

தமிழகமெங்கும் புதிய மரக்கன்று பண்ணைகளை உருவாக்கி,36 வகையான மரக்கன்றுகளை வளர்த்து, தமிழகத்து மக்களுக்கு நன்கொடையாக தருவதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு ஈஷாவுக்கு 10 லட்சம் மரக்கன்றுகளை தந்தது. ஈஷாவின் பசுமைக்கரங்கள் திட்டத்தில் மரக்கன்றுகளை பயன்படுத்தியதில், இக்குழுமத்துக்கு திருப்தி ஏற்படவில்லை. மீண்டும், ஒரு கோடி மரக்கன்றுகளை அளிக்கவுள்ளது.

ஈஷாயோக மைய நிர்வாகி ஒருவர் கூறுகையில், மரக்கன்றுகளை நடுவதால்,தமிழகத்தில் பசுமைப்பரப்பை அதிகரிக்கலாம். ஈஷாவின் பசுமைக்கரங்கள் அமைப்பு, 'ஈவ்ஸ் ரோச்சர்' குழுமம் இணைந்து புதிய முயற்சியை துவக்கியுள்ளது. மரக்கன்றுகளை நட விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஈஷா பசுமைக்கரங்கள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படலாம். இத்திட்டம் பற்றிய விபரங்கள் அறிய 0422 - 2580186 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


Reference:
தினமலர்


2 comments:

  1. gud evg iam jayabalansingh frm pdy and i need kumizh teak tree to plant in my land where i amy get the same pl mail me the detail my mail ,id jayabalansingh@yahoo.co.in/sify.com

    ReplyDelete