Thursday, March 25, 2010

மரக்கன்று நடுதல், மரம் வளர்ப்பு - சிறு தகவல்கள் 5

இப்பகுதி, முன் அனுபம் இல்லாதவரால் எழுதப்பட்டது. தகவல் பிழைகள், மேம்பட்ட தகவல்களை பின்னூட்டத்தில்(Comments) தெரிவிக்கவும்.

அரச மரம்

அரச மரத்தின் பயன்கள்

அரச மரக்கன்று நட இடத்தை தேர்ந்தெடுத்தலும் நடுதலும்

அரச மரக்கன்று பராமரிப்பும் கண்காணிப்பும்
குமிழ் மரம்

குமிழ் மரத்தின் பயன்கள்

குமிழ் மரக்கன்று நட இடத்தை தேர்ந்தெடுத்தலும் நடுதலும்

குமிழ் மரக்கன்று பராமரிப்பும் கண்காணிப்பும்

திரு.லோகநாதன் - கோவையில் மரம் நடும் பேருந்து நடத்துனர்

திரு, எஸ். பாபு எழுதிய இக்கட்டுரை தன்னம்பிக்கை இணையதளத்தின் வழியாக எடுக்கப்பட்ட்டுள்ளது.

செய்தி நாள்: அக்டோபர்-2008

இரண்டு வாரங்களுக்கு முன்பு, கோவையில் “நெருஞ்சி இலக்கிய முற்றம்” என்ற அமைப்பின் சார்பாக ஒரு பாராட்டு விழா நடந்தது. பாராட்டப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவர் பேருந்து நடத்துனர் திரு.லோகநாதன். மற்றவர் தோழர் அறக்கட்டளை என்ற அமைப்பைச் சேர்ந்த திரு. சாந்தகுமார்.

இருவரும் சாதனைகளின் இரு வேறு சிகரங்கள். தனியொரு மனிதராக தமிழ்நாட்டில் இதுவரை முப்பதாயிரம் மரங்களுக்கும் மேலாக நட்டு சாதனை புரிந்திருக்கிறார் லோகநாதன். அவரது முயற்சியைப் பாராட்டி ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. ஊரையே பசுமையாக்குகிறோம் பேர்வழி என்று வெறும் விளம்பரத்திற்காக மரங்களை நட்டு அதை புகைப்படம் எடுத்து செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்திக் கொண்டு, பிசினஸ் நோக்கத்தில் செயல்படும் எந்த ஒரு அமைப்பையும் சாராதவர் இவர் என்பது ஆச்சரியமான தகவல். தன்னுடைய சமூகப்பணிக்கு இவர் உதவி நாடுவது, பள்ளிக்கூட குழந்தைகளிடம் மட்டும் தான். பள்ளிக் கூடங்கள் தோறும் சென்று இயற்கை மற்றும் மரங்கள் சம்பந்தமான காட்சி (Slide show) நடத்துகிறார். பின்னர் ஆர்வமுள்ள மாணவ-மாணவியரைக் கொண்டு அந்தந்தப் பகுதிகளில் மரங்களை நடுகிறார்.

இன்றைய காலகட்டத்தில் “மரம் நடுவது” என்பது பேஷனாகிவிட்டது. மரம் நடு விழாக்களைப் பற்றி நாள்தோறும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஆனால் அந்த மரங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனவா என்று கேட்டால், இல்லை என்பது தான் உண்மை. ஆனால் லோகநாதன் சற்று வித்தியாசமானவர். எந்த இடத்தில் மரம் நட்டால் அது வளரும் என்பதை முதலில் ஆராய்ந்து இடங்களை தேர்வு செய்கிறார். பின்னர் பள்ளிகூடக் குழந்தைகளைக் கொண்டு அங்கே மரங்களை நட்டு, அந்த மரங்களுக்கு “ப்ரியா புளியமரம்”, “விக்னேஷ் வேப்பமரம்” என்று குழந்தைகளின் பெயரை சூட்டுகிறார். இதனால் இது தங்களுடைய மரம் என்கிற உணர்வும் பொறுப்பும் குழந்தைகளுக்கு வந்து விடுவதால், அவர்களே மரங்களுக்கு பாதுகாப்பு அளித்து, நீருற்றி பராமரிக்கிறார்கள்.

Reference:
தன்னம்பிக்கை இதழ் - ஒரு பாதசாரியின் பயணக்குறிப்பு


Wednesday, March 24, 2010

ஒளிச்சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது? - சந்தேகங்கள்

1. மரம் பகலில் கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிசனை வெளியிடுகிறது. இரவில் ஆக்சிசனை எடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகிறது.
பகலிலும் இரவிலும் மனிதன் ஆக்சிசனை மட்டுமே எடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்சைடை மட்டுமே வெளியிடுகிறான். வாகனங்கள் கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன. மரம் தான் விட்டதையெல்லாம் எடுத்துக்கொள்கிறதே? பிறகு எப்படி ஆக்சிசன் சமநிலை காப்பாற்றப்படுகிறது?

2. இவ்வுலகில் ஆக்சிசன் உற்ப்பத்திக்கு, மரங்கள் 25 சதவிகிதம் தான் உதவுகிறதாமே? உண்மையா? அப்படி என்றால் மரங்களை தவிர்த்து வேறு என்னென்ன காரணிகள் ஆக்சிசன் உற்பத்திக்கு உதவுகின்றன?


Tuesday, March 23, 2010

ஒளிச்சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது?

மஞ்சரி இதழின் இக்கட்டுரை தினமலரின் வழியாக எடுக்கப்பட்ட்டுள்ளது.

ஒவ்வொரு இலையிலும் ஓர் உணவுத் தொழிற்சாலை :
மரம்,செடி,கொடிகளின் இலைகளின் உருவங்களில் (நீள,அகலம்) தான் எவ்வளவு வேறுபாடு. கருவேல மரத்தின் மிகச்சிறிய இலைகள் ஒன்று அல்லது இரண்டு மில்லி மீட்டர் நீள அகலம் கொண்டவை. தேக்கு மரத்தின் இலைகள் அவற்றைக் காட்டிலும் நூறு மடங்குப் பெரியவை. வாழை இலைகள் ஆயிரம் மடங்குப் பெரியவை. எல்லா இலைகளிலுமே ஒரு உணவுத்தொழிற்சாலை உள்ளது. இலைகளின் செல்களில் உள்ள பச்சையம் (க்ளோரோஃபில்) சூரிய ஒளியிலிருந்து பெறும் சூரியனின் ஆற்றலை, காற்றிலுள்ள கரியமில வாயு மற்றும் வேரிலிருந்து உறிஞ்சப்ப்பட்டு இலையை அடையும் நீரின் நுண்துளிகளையும் ( மாலிக்யூல்கள்) பயன்படுத்தி, சர்க்கரைச் சத்தாக மாற்றுகிறது. இதைத்தான் ஒளிச்சேர்க்கை என்கிறோம்.

சத்து தண்டுப்பகுதி வழியாக செடி மரத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.நெல்மணிகள், கரும்பின் இனிப்பு, மாம்பழம், முந்திரி, பாதாம், பாகற்காய் எல்லாவற்றுக்குமே இந்த உணவுதான் ஆதாரம்.

இந்த உணவு உற்பத்தித் திறன் காரணமாகத் தாவரங்கள் தாமும் வாழ்ந்து ஏனைய உயிரினங்களையும் ஆடு, மனிதன் உள்பட வாழ வைக்கின்றன.

ஒவ்வொரு இலையிலும் ஓர் ஏர்கூலர் மற்றும் நுரையீரல் :
சர்க்கரை அல்லது மாவுச்சத்தின் உபரிப் பொருளாக ஆக்சிஜன் (பிராண வாயு) இலைகளின் அடிப்பகுதியின் மேற்பரப்பில் உள்ள ஸ்டோமேட்டா என்றழைக்கப்படும் செல்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

கூடவே சற்று உபரி நீரும் ஆவியாக வெளியேறுகிறது. இதன் காரணமாகவே நாம் வெயில் பொழுதில் மரத்தடியில் நாம் ஒதுங்கும்போது புத்துணர்வு பெறுகிறோம், குளிர்ச்சியும் உண்டு.
இதே ஸ்டோமேட்டா செல்கள்தான் ஒளிச்சேர்க்கை நிகழாக சமயங்களில் சூரியஒளி இல்லாத பகல்பொழுதிலும், இரவு நேரங்களிலும் ஏனைய உயிரினங்களைப் போல காற்றைச் சுவாசிக்கின்றன.
அதாவது காற்றிலுள்ள பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. அதனால் இரவு நேரங்களில் மரத்தடியில் இளைப்பாறும்போது புத்துணர்வு தோன்றாது.

புளிய மரமும், பேயும் :
கொஞ்சம்கூடக் காற்றின் அசைவு இல்லாத சமயங்களில் பெரிய அடர்ந்த புளியமரம் போன்ற மரத்தடியில் உறங்கினால் உங்களைப் பேய் அடித்துக் கொல்லும் வாய்ப்பு உண்டு என்றே பாமர மக்கள் நம்புகிறார்கள்.

அதன் அறிவியல் அடிப்படையிலான விளக்கம் :
காற்று அசைவு இல்லாவிடினும் இலைகள் சுவாசிக்கும்போது வெளியேறும் கரியமிலவாயு காற்றைவிடச் சற்று கனமானது. கரியமில வாயு காற்றில் சாதாரணமாக 0.5 விழுக்காடுதான் உள்ளது. இரவு நேரங்களில் அதுவும் காற்றின் சலனம் இல்லாவிடில் மரத்தடியில் கரியமிலவாயுவின் அளவு அதிகரிப்பதால் நமக்கு மூச்சு அடைக்கும். உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவர்களின் உயிரை எடுப்பது இந்தப் பேய்தான்.

ஒவ்வொரு மரத்திலும், பொறியியல் கட்டிடக்கலை தொழில்நுட்பம் ( எஞ்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்சர்):
ஆஸ்திரேலியா நாட்டில் வளரும் சில தைல மரங்கள் (யூக்கலிப்டஸ்) 300 அடி உயரம் வளரக் கூடியவை. அமெரிக்க கண்டத்தில் வளரும் சேக்கோவியா மரங்கள் 400 அடிக்கும் கூடுதலாக வளர்கின்றன. அவற்றை நாம் பார்த்ததில்லை.

நாம் பார்த்துள்ள, பார்த்து வரும் பெரியபுளியமரம் அல்லது வேப்பமரங்கள் 60-70 அடி உயரம் வளர்கின்றன. 20-30 அடி உயரம் உள்ள தடிமனான அடிமரம் பிறகு அவற்றிலிருந்து பிரிந்து செல்லும் கிளைகள், கொப்புகள், அவற்றில் வளரும் இலைகள், காய்க்கும் காய்கள், பழங்கள் எல்லாம் 60-7- டன்களுக்கு மேல் எடை கொண்டவை. காற்றுக்கும் வளைந்து கொடுத்து அதே சமயம் உறுதியாக நிற்பவை.

இந்த ஒட்டுமொத்த எடையைப் பூமிக்கடியில் வேர்கள் ஒரு கட்டிடத்தின் அஸ்திவாரம் போல் தாங்கிக் கொள்கின்றன. அடிமரத்திலிருந்து பிரியும் கிளைகள், கோப்புகள் எல்லாமே ஒரு கணிதம்.- குறிப்பாக ஜியோமிதி கணித அடிப்படையில் பிரிந்து செல்கின்றன. அதாவது கட்டிடக்கலை வல்லுநர் திட்டமிடுவதுபோல மரமும் ஒரு திட்டத்துடன்தான் கிளைகளைப் பரப்புகிறது.

அதே சமயம் இலைகளுக்குப் போதுமான அளவில் சூரிய ஒளி கிடைப்பதையும் உறுதி செய்து கொள்கிறது. அப்போதுதான் நாம் முன்பே குறிப்பிட்ட ஒளிச்சேர்க்கை உணவு தயாரிப்பு எல்லாமே நிகழ முடியும்.


Reference
மஞ்சரி : ஒவ்வொரு மரத்திலும் ஒரு உலகம்


.

மரக்கன்று நடுதல், மரம் வளர்ப்பு - சிறு தகவல்கள் 4

யாரேனும் இவைகளை மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும்.
மொழிப்பெயர்ப்பு வேண்டாம். பதிப்புரிமை பிரச்சனை வரும். யாரேனும் இவைகளை தழுவி தனிக்கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.

ஐநா சுற்றுப்புற திட்டம்
Tree Planting Tips

Planting A Tree a step-by-step guide

ஏன் மரம் இலைகளை உதிர்க்கிறது? எப்படி?
Why Leaves Really Fall Off Trees

வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் “மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு” வேலைகள்.
Meeting India's tree planting guru

மரம் நடுதல் ஆலோசனைகள்
Tree Care Information - New Tree Planting

Proper Mulching Techniques

Pruning Young Trees

Caring for Young Street Trees

The do's and don'ts of planting new trees

Tree Planting Tips

.

Monday, March 22, 2010

மர நடைப்பயணம் [OR] மர சுற்றுலா செய்வது எப்படி?

இப்பகுதி, முன் அனுபம் இல்லாதவரால் எழுதப்பட்டது. தகவல் பிழைகள், மேம்பட்ட தகவல்களை பின்னூட்டத்தில்(Comments) தெரிவிக்கவும்.

மரக்கன்று நடுதல், மரம் வளர்ப்பு - Do's & Dont's

இப்பகுதி, முன் அனுபம் இல்லாதவரால் எழுதப்பட்டது. தகவல் பிழைகள், மேம்பட்ட தகவல்களை பின்னூட்டத்தில்(Comments) தெரிவிக்கவும்.

Do'sDont's
 • கட்டடம் கட்டும் வேலை நடக்கும் இடங்களை தேர்ந்தெடுக்காதீர்கள்
 • மண்ணை கொட்டியே நாம் நட்ட மரக்கன்றை மூடிவிடுவார்கள்.


மரக்கன்று நடுதல், மரம் வளர்ப்பு - சிறு தகவல்கள் 3

இப்பகுதி, முன் அனுபம் இல்லாதவரால் எழுதப்பட்டது. தகவல் பிழைகள், மேம்பட்ட தகவல்களை பின்னூட்டத்தில்(Comments) தெரிவிக்கவும்.

ரோட்டோரங்களில் வளர்க்க சிறந்த மரங்கள் என்னென்ன?
1.
2.
3.பள்ளி வளாகங்களில் / மருத்துவமனைகளில் வளர்க்க சிறந்த மரங்கள் என்னென்ன?
1.
2.
3.

கோயில் வளாகங்களில் வளர்க்க சிறந்த மரங்கள் என்னென்ன?
1.
2.
3.

வீட்டுக்கு அருகில் உள்ள பெரிய காலி இடங்களில் நட சிறந்த மரங்கள் என்னென்ன?
1.
2.
3.


நாங்கள் ஒரு குழு. மரம் நட எங்களுக்கு ஏதாவது காரணம் வேண்டும். சும்மா எங்களால் ஒன்றும் தொடங்க முடியாது. நீ சொல்லேன்...மச்சான் நீ சொல்லேன்.

நல்ல கததான். மனித மனமே இப்படித்தான் போலும். சிறு தகவல்கள் 2 வில் ஒரு குழுவாக இயங்குகையில் என்ன செய்வது என்று பார்த்தோம். அதை அப்படியே ஒரே நாளில் செய்ய வேண்டும் அவ்வளவுதான்.
கீழே சொல்லியிருக்கற விடுமுறை நாள்களில் உங்கள் வீதி, காலனி மக்களை சேர்த்துக் கொண்டு மரம் நடலாம்.
 • ஜனவரி 26 - குடியரசு தினம்
 • மே 1 - தொழிலாளர் தினம்
 • ஆகஸ்டு 15 - சுதந்திர தினம்
 • அக்டோபர் 2 - காந்தி பிறந்தநாள்
 • நீங்கள் அல்லது உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியின், கல்லூரியின் ஆண்டு விழா

மனித உழைப்பு உள்ள இடங்கள்
நமது ஊரில் மனித உழைப்பு எளிதாக கிடைக்கும். ஆனால் மரம் நடுவது என்றால் அதை எப்படி முறைப்படுத்தி செய்வது என்று தெரியாது. பொதுவாக மனித உழைப்பு உள்ள இடங்கள் கீழ்வருமாறு.

 • காலனி அசோசியேசன்கள்
 • பள்ளிகளில் உள்ள சாரணர் இயக்க மாணவர்கள் மற்றும் NSS மாணவர்கள் (NCC மாணவர்கள் எப்போழும் பயிற்சியிலேயே இருப்பார்கள்)
 • ஒவ்வொரு ஊரிலும் உள்ள நற்பணி இயக்கங்கள்
 • திரைப்பட நடிகர்களின் ரசிகர் மன்றங்கள்


மரக்கன்று நடுதல், மரம் வளர்ப்பு - சிறு தகவல்கள் 2

இப்பகுதி, முன் அனுபம் இல்லாதவரால் எழுதப்பட்டது. தகவல் பிழைகள், மேம்பட்ட தகவல்களை பின்னூட்டத்தில்(Comments) தெரிவிக்கவும்.

மரக்கன்று நட்டு வளர்ப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்துக்கொள்ள நினைக்கிறேன். எப்படி தொடங்குவது? என்ன வழி முறை?
இப்படித்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. போகிற போக்கில் உங்கள் வீட்டு வாசலில் ஒரு மரக்கன்று நடலாம். அவ்வப்போது தண்ணீர் ஊற்றலாம். அவ்வளவே மரம் வளர்ப்பு.
பூச்செடி வளர்ப்பதும் மரம் வளர்ப்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். மரக்கன்று வாங்குங்கள். வாசலில் வையுங்கள். அவ்வப்போது தண்ணீர் ஊற்றுங்கள்.

அதன் வளர்ச்சியை பார்த்து அப்படியே உங்கள் உள்ளம் பூரிக்கும். பிறகு இரண்டு, மூன்று மரம் என்று அதிகரித்து செல்லுங்கள்.

நாங்கள் நான்கு பேர் கொண்ட ஒரு குழு. நாங்கள் என்ன செய்யலாம்?
சின்ன வயதில சிங்கம்-மாடுகள் கதை கேட்டிருப்போம். கதையை விட்டுவிடுவோம், கதைக்கருவை எடுத்துக்கொள்வோம். தனி மனிதனை விட ஒரு குழுவாக இருந்தால் கொஞ்சம் பெரிய அளவில் வேலை செய்யலாம். சாதிக்கலாம். ஒருவர் போனாலும், மற்றவர்களால் தொடங்கிய வேலை தொடர்ந்து நடக்கும்.

ஒரு குழு எனும் போது, சிறிய செயல் திட்டம் ஒன்று தேவை. அது பின்வருமாறு.

1. பதியம் போட்டு மரக்கன்று வளர்த்தல்

2. மரக்கன்று நடுவதற்கான இடத்தை தேர்ந்தெடுத்தல்

3. மரக்கன்று நடுவதற்கான இடத்தை தயார்படுத்துதல்
 • அரை முழங்கை ஆழத்திற்கும், அரை அல்லது முழு முழங்கை அகலத்திற்கும் மண்வெட்டியால் குழி வெட்டுங்கள்.
 • வெட்டும் போது மண் கட்டியாக வந்தால், அதை உடைத்து தூள் செய்து கொள்ளுங்கள்
 • குழியின் அடி அழத்தில் கொஞ்சம் காய்ந்த இலை தழைகளை போடுங்கள். பிறகு சிறிது மண்ணை தூவி இலை தழைகளை மூடுங்கள்.

4. மரக்கன்று நடுதல்
 • பிறகு மரக்கன்றை குழியில் வைத்து, சுற்றிழும் மண்ணை போட்டு மூடுங்கள். மரக்கன்றை சுற்றி மண்ணை போட்டு அமுக்காதீர்கள், மண் பொது பொதுவென்று இருக்க வேண்டும்.
 • எல்லா மண்ணையும் போட்டு கன்றை சுற்றி மேடாக்கி விடாதீர்கள். சுற்றுபுறத்தை விட சற்று குழியாக இருக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர் தேங்கி நிற்க வசதியாக இருக்கும்.
 • பின் மரக்கன்றை சுற்றி தண்ணீர் ஊற்றுங்கள்.
 • பிறகு மரக்கன்றை சுற்றி காய்ந்த இலை தழைகளை போட்டு மூடி வையுங்கள். இவை ஈரம் சீக்கிரம் காய்ந்து போகாமல் தடுக்கும்.

5. சிறிய அளவில் பாதுகாப்பை ஏற்படுத்துதல்

6. முதல் வார பாராமரிப்பு மற்றும் கண்காணிப்பு
மரக்கன்று நட்டு,
 • முதல் ஒன்பது நாட்களுக்கு, மூன்று தினங்களுக்கு ஒரு முறை நீர் விடுங்கள்

7. 2, 3, 4 ஆம் வார பாராமரிப்பு மற்றும் கண்காணிப்பு
 • பிற்கு மூன்று மாததிற்கு வாரத்திற்கு ஒரு முறை நீர் விடுங்கள்.


மேலும் சில தகவல்கள்:
எளிதில் மரம் வளர்க்க சில உத்திகள்


மரக்கன்று நடுதல், மரம் வளர்ப்பு - சிறு தகவல்கள் 1

இப்பகுதி, முன் அனுபம் இல்லாதவரால் எழுதப்பட்டது. தகவல் பிழைகள், மேம்பட்ட தகவல்களை பின்னூட்டத்தில்(Comments) தெரிவிக்கவும்.

மரக்கன்று நட ஏற்ற காலப்பருவம் எது? எப்போ வேண்டுமானாலும் மரத்த நட்டு வளர்க்க முடியுமா?
எப்போ வேண்டுமானாலும் மரக்கன்று நட்டு வளர்க்கலாம். ஆனா மரக்கன்றுகள் ஓரளவுக்கு பெரியதாக வளரும் வரை, வெயில், மழை மற்றும் குளிர் காலங்களில் அந்த அந்த காலத்திற்கு ஏற்ப சில ஏற்பாடுகளையும் பராமரிப்பு பணிகளையும் மேற்க்கொள்ள வேண்டும்.

நான் இப்பொழுதுதான் மரக்கன்று நட்டுள்ளேன். வெயில் காலத்தில் என்னென்ன பிரச்சனைகள் வரும்? அவற்றை சமாளிப்பது எப்படி?
வெயில் காலத்தில் மனிதனாகிய நமக்கு என்ன ஆகிறது. வெயில் சுட்டெரிக்கிறது. ஒரு ஐந்து நிமிடம் வெயிலில் நின்றாலே, தலை எரிகிறது. தலையே வெந்துவிடும் போலிருக்கிறது. உடனே மரமிருக்கும் இடமாக பார்த்து அதனடியில் நின்று கொள்கிறோம்.
பாவம் கொளுத்தும் வெயிலில் மரக்கன்று நின்றால என்னவாகும்? கருகிவிடாது.
எனவே, மரக்கன்றுக்கு ஒரு மூடாக்கு போடலாம். தென்னம் மட்டைகளை கூம்பு போல மரக்கன்றை சுற்றி கட்டி வைக்கலாம்.

அப்புறம் என்னாகும். வெயில்னால பூமியோட மேற்பரப்பு மண்ல இருக்கற ஈரப்பதம் எல்லாம் ஆவியாயிரும். ஒரு முழங்கால் அடி மண்ணை தோண்டினாதான் ஈரமண்ணையே பாக்க முடியும். மரக்கன்னுனால ஒரு முழங்கால் அடி வேர உடமுடியுமா? ஒரு விரலளவு ஆழந்தான் வேர் வளந்துருக்கும்.
அதனால ஒரு ரெண்டு நாளைக்கு ஒருதடவ கொஞ்சம் கொஞ்சம் தண்ணி ஊத்தனும்.

மழைக்காலத்தில் என்னென்ன பிரச்சனைகள் வரும்? அவற்றை சமாளிப்பது எப்படி?
சரிவான இடத்தில் மரக்கன்று இருந்தால் மழை நீரில் அடித்து சென்று விடும். எனவே நீர் வழிந்தோடும் பாதையை விட்டு சற்று ஒதுக்குபுறமாக மரக்கன்று நடவேண்டும்.
இதைத் தவிர வேறு ஒன்றும் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. மழைக்காலம் தொடக்கத்திலும், முடிவிலும்  கொஞ்சம் கொஞ்சம் தண்ணி ஊத்தனும்.
மற்றபடி அதிக நீர்த்தேவையும் இருக்காது. அதிக பராமரிப்பும் தேவைப்படாது.


குளிர்க்காலத்தில் என்னென்ன பிரச்சனைகள் வரும்? அவற்றை சமாளிப்பது எப்படி?
குளிர்க்காலத்துல பனி அதிகமா இருந்துச்சுன்னா, சிறு மரக்கன்றுகளோட தலை, அதாவது குருத்து இலைகள் கருகிவிடும். அதனால இப்பவும் வெயில் காலத்துல போடுற அதே மாதிரி மூடாக்கு போடலாம்.
மத்தப்படி அப்ப அப்ப கொஞ்சம் தண்ணி ஊத்தனும்.நம்ம ஊரில், தமிழ்நாட்டில் எந்தெந்த மாதங்களில் வெயில், குளிர், மழைக்காலம்?
வெயில் காலம் - மார்ச் மாசம் தொடங்கி ஜூன் மாசக்கடைசி வரை நாலு மாசம்.
மழை காலம் - ஜூலை மாசம் தொடங்கி அக்டோபர் மாசம் முடிய
குளிர்/பனி காலம்  - நவம்பர் மாசம் தொடங்கி பிப்ரவரி முடியவிதை போட்டு மரம் வளர்க்கலாமா? இல்லை பதியம் போட்டு மரம் வளர்க்கலாமா? இல்லை நர்சரியிலிருந்து வாங்கி வந்து நடலாமா?எனக்கெல்லாம் நேரமில்லை. மாதத்திற்கே கொஞ்ச நேரம் தான் செலவிட முடியும். So, குறைந்த பராமரிப்பு தான் செய்யமுடியும் என்றால் எப்ப மரக்கன்று நடலாம்?
அப்படின்னா, மழைக்காலதோட தொடக்கதுல இருந்து மழைக்காலம் முழுவதும் மரம் நடுவது சிறந்தது. மண்ணுல ஈரப்பதம் அதிகம் இருக்கும். தண்ணியும் அதிகமா ஊத்த தேவையில்ல.
Saturday, March 20, 2010

விவசாய வானொலி நிகழ்ச்சிகள் நேர அட்டவணை

இவ்வட்டவணை http://agritech.tnau.ac.in/ta/daily_events/radio_ta.html லிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், வேளாண் நிகழ்ச்சியானது, கீழ்வரும் வானொலி அலைவரிசை மூலம் ஒலிபரப்பப்படுகிறது.
வானொலி
நேரம்
நிகழ்ச்சி
தொலைபேசி எண்
சென்னை
(கிலோ ஹெட்ஸ்)
720 KHz
783 KHz
1017 KHz
4920 KHz
7160 KHz
(மெகா ஹெட்ஸ்)
101.4 MHz
102.3 MHz

காலை
6.30 - 6.45 மணி
மாலை
6.45 - 7.00 மணி
7.25 - 8.00 மணி

வேளாண் அறிக்கைகள்
மண்ணும் மணமும் வீடும் வயலும்


914424985252
திருநெல்வேலி
1197 KHz
காலை
6.30 - 6.45 மணி
மாலை
7.25 - 8.00 மணி
வேளாண் அறிவிப்புகள்
உழவர் உலகம்

9142560794-6
மதுரை
1269 KHz
103.3 KHz
காலை
6.30 - 6.45 மணி
மாலை
7.25 - 8.00 மணி
சனிக்கிழமை
6.45 - 7.00 மணி
ஒரு சொல் கேளீர்
இந்த ஊர் செய்தி மண்ணும் மணியும்
பூந்தோட்டம்

91452 - 2530410
திருச்சி
936 KHz
102.1 MHz
காலை
6.30 - 6.45 மணி
மாலை
3.00 - 3.30 மணி
மாலை
7.25 - 8.00 மணி
வேளாண் அறிவிப்புகள்
வேளாண் அரங்கம்
உழவர் உலகம்

914312415342
கோயமுத்தூர்
999 KHz
103.0 MHz
காலை
6.35 - 6.45 மணி
மாலை
3.00
6.45 - 7.25மணி
7.25 - 8.00 மணி
வேளாண் அறிவிப்புகள்
உழவருக்கு ஒரு சொல்
ஊர்ப்புறத்தில்
ஏரும் ஊரும்.
914222316314

மரம் வளர்ப்பு சம்பந்தமாக எங்கே உதவிகள் கிடைக்கும்?

இப்பகுதி, முன் அனுபம் இல்லாதவரால் எழுதப்பட்டது. தகவல் பிழைகள், மேம்பட்ட தகவல்களை பின்னூட்டத்தில்(Comments) தெரிவிக்கவும்.

மரம் வளர்ப்பு சம்பந்தமாக எங்கே உதவிகள் கிடைக்கும்?

விவசாய இதழ்கள்
இங்கே உங்களுக்கு வணிக முறை மரம் வளர்ப்பு பற்றி தகவல்கள் கிடைக்கலாம்
 1. பசுமை விகடன்
 2. பூவுலகின் நண்பர்கள்

தன்னார்வ இயக்கங்கள்
 1. பசுமைக்கரங்கள் - கோவையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ஈசா யோக மையத்தின் உதவியோடு இயங்கும் அமைப்பு
 2. நிழல்கள் - சென்னையில் இயங்கும் மரம் வளர்ப்பு இயக்கம்
 3. Chennai Social Service - சென்னையில் இயங்கும் மரம் வளர்ப்பு இயக்கம்

விவசாய, வனக் கல்லூரிகள்
இங்கே உங்களுக்கு வணிக முறை மற்றும் தன்னார்வ மரம் வளர்ப்பு பற்றிய தகவல்கள் கிடைக்கலாம்
 1. தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். இணையதளம்: http://www.tnau.ac.in
 2. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மேட்டுப்பாளையம். Forest College and Research Institute, Mettupalayam. இணையதளம்: http://www.fcrinaip.org
 3. தமிழகத்தில் உள்ள விவசாய, வனக் கல்லூரிகளின் தொகுப்பு: http://www.tnau.ac.in/acad/colleges.html

அரசு நிறுவனங்கள்
இங்கே உங்களுக்கு வணிக முறை மரம் வளர்ப்பு பற்றிய தகவல்கள் கிடைக்கலாம்
 1. கோயம்புத்தூரில் உள்ளது Institute of Forest Genetics and Tree Breeding என்ற அரசு நிறுவனம். இவர்கள் மர விதைகள், மரம் வளர்ப்பு முறைகளை சொல்லி தருகிறார்கள். இணையதளம்: http://ifgtb.icfre.gov.in


குழந்தைகள் பெயரில் மரக்கன்று நடும் திட்டம்

செய்தி நாள்: 11-நவம்பர்-2009

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகள் பெயரில் மரக்கன்று நடும் திட்டம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இயற்கையின் கொடையான மரங்களை வளர்க்கவும், புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவதிலும் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறார்.

   இதன்படி மாவட்டம் முழுவதிலும் ஒரே நேரத்தில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் பள்ளி மாணவ, மாணவியர், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொது மக்கள் ஆகியோர் பங்கேற்புடன் அண்மையில் செயல்படுத்தப்பட்டது.

  இதற்கான வரவேற்பு நல்ல முறையில் இருந்து வருவதைத் தொடர்ந்தும், ஒவ்வொரு மனிதரிடையேயும் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒட்டி மரம் வளர்ப்பதைத் தொடர் இயக்கமாக செயலாக்கும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் புதிய திட்டத்தைத் தொடங்க உள்ளார்.

   இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மாதம்தோறும்  1500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.

  இந்தக் குழந்தைகளின் பெற்றோர்களிடம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி தங்களது குழந்தைகளின் பெயரில் மரம் வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

   இந்தத் திட்டம் முதல் கட்டமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நவம்பர் 13 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

 வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் மரக்கன்றுகளைக் கொடுத்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக  ஆட்சியர் மா.வள்ளலார் தெரிவித்துள்ளார்.

Reference
தினமணி

காடு வளர்ப்பு மக்கள் இயக்கமாக வேண்டும்

செய்தி நாள்: 30-டிசம்பர்-2009

காடு வளர்ப்பை மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும் என்று காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் சோம.ராமசாமி பேசினார்.

தமிழ்நாடு வனத் துறை வனவியல் விரிவாக்கத் துறை சார்பில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை மரம் வளர்க்கும் தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்குத் தலைமை வகித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் சோம.ராமசாமி பேசியதாவது:

பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.

காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு, புவி வெப்பம் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி உருவாகிறது. கடலோரப் பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும்போது அலைகளை கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டாகிறது. புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்க முடியும்.

காடு வளர்ப்பு என்பதை ஒரு மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும். தமிழகத்தின் எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், மண்ணின் வகை, அமிலத் தன்மை, வளம் ஆகியவை குறித்த ஆய்வு அறிக்கையை காந்திகிராம பல்கலைக்கழகம் வழங்க முடியும். எந்த மரங்களை நட்டால் வேகமாக வளரும் என்பது குறித்த ஆய்வுக் கட்டுரையையும் தர முடியும் என்றார் துணைவேந்தர் சோம.ராமசாமி.

சென்னை வனவிரிவாக்கத் தலைமை வன பாதுகாவலர் வை.இருளாண்டி பேசுகையில், இந்தியாவில் 33 சதவிகித அளவுக்கு இருந்த காடுகள் குறைந்து தற்போது 22 சதவிகித காடுகள் மட்டுமே உள்ளன. இந்த 11 சதவிகிதத்தை அடைய வேண்டும் என்றால் 54 கோடி மரங்களை நடவேண்டும். வனத்துறை மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியாது. எனவே ஆளுக்கொரு மரம் நடவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக மதுரை வனவிரிவாக்க அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார். திருச்சி வனவிரிவாக்க அலுவலர் பா.சொர்ணப்பன் நன்றி கூறினார்.

வனவிரிவாக்கத்தில் நற்பணிபுரிந்து இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷ மித்ரா விருது பெற்ற வனத்துறை அலுவலர் உ.வீரக்குமார் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார்.

Reference:
தினமணி

எஸ்.எம்.எஸ். பண்ணு; இலவச மரக்கன்னு ஒண்ணு

செய்தி நாள்: 13-செப்டம்பர்-2009

Reference:
தினமணி
Chennai Social Service

”எஸ்.எம்.எஸ். பண்ணு; இலவச மரக்கன்னு ஒண்ணு” -என்று ஓர் இணையதளத்தில் விளம்பரம். தொலைபேசி எண்: 98940 62532.

அந்த எண்ணில் தொடர்புகொண்டு பேசினால், இலவச மரக்கன்று தருவதைவிட ஆச்சரியமான விஷயம், அதைத் தருபவர்கள் "ஆர்குட் நண்பர்கள்'.


"சென்னை சமூக சேவை' என்ற பெயரில் தொண்டு நிறுவனமாக இயங்கும் அவர்களின் சார்பாக சத்தியமூர்த்தி பேசினார்:

""2005 முதல் இந்த அமைப்பைத் தொடங்கி செயல்பட்டு வருகிறோம். இதில் 1400 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே ஆர்குட் மூலம் அறிமுகமானவர்கள்தான். இதில் நானும் மற்றொருவரும்தான் திருமணமானவர்கள். மற்ற எல்லோரும் மணமாகாதவர்கள். மருத்துவர், பொறியாளர், ஆசிரியர், ஐடியில் வேலை செய்பவர்கள் என எல்லோரும் பல்வேறு துறையில் வேலை செய்பவர்கள்.

எந்தச் சேவையையும் எங்கள் சொந்தப் பணத்தைப் போட்டுத்தான் செய்கிறோம். யாரிடம் இருந்தும் பணம் வாங்குவதில்லை.

சுத்தமான உலகத்தை உருவாக்கப் பாடுபடுவதுடன், மனிதர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்வதே எங்கள் நோக்கம்.

எங்களுக்குச் சொந்தமாக அலுவலகம் இல்லை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வள்ளுவர் கோட்டத்தில் கூடி என்ன செய்யலாம் என்பது குறித்து திட்டமிடுவோம். அதன்படி எல்லோரும் செயல்படுவோம். வேறு எவ்வித லாபநோக்கத்திற்காகவும் செயல்படவில்லை.

  தற்போது சென்னையில் அதிக உறுப்பினர்கள் இருப்பதால் இதற்கு அதிக முக்கியத்தும் கொடுத்து செயல்பட்டு வருகிறோம்.

எங்கள் உறுப்பினர்களையே ஒன்பது பிரிவாகப் பிரித்து சமூக சேவை செய்து வருகிறோம். ஏழை குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, முதியோர்கள் இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்வது, பார்வையற்றவர்களுக்குத் தேர்வு எழுதுவது போன்ற சேவைகளைச் செய்வது, சாலை பாதுகாப்பை பொதுமக்களிடம் வலியுறுத்துவது, குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இயற்கை பேரிழப்பு ஏற்படுகிற காலங்களில் எப்படிச் செயல்படுவது போன்றவற்றை அவர்கள் தனித்தனியாகச் செய்து வருகிறார்கள்.

இதன் ஒரு கட்டமாகத்தான் குங்குமம், மகிழம், இலுப்பை, பூவரசு, பாதாம், கொய்யா, புன்னை, ஏழிலைப்பனை, மேபூ, யானை குண்டுமணி ஆகிய மரங்களை இலவசமாக வழங்கி வருகிறோம்.

கடந்த வருடம் நாங்களே பல இடங்களுக்குச் சென்று நட்டு வந்தோம். தற்போது எஸ்.எம்.எஸ். அனுப்புகிறவர்களுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று மரக்கன்றை நட்டு அதைப் பராமரிப்பது பற்றிச் சொல்லிக் கொடுக்கிறோம்.

இந்தத் திட்டத்திற்கு நாங்கள் "என் பெயர் மரம்' என்று வைத்திருக்கிறோம். ஒரு வீட்டில் மரக்கன்றை நடுகிறபோது அந்த வீட்டில் உள்ள குழந்தையின் பெயரையே வைக்கிறோம். இப்படி வைப்பதால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மரக்கன்றின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அதிக கவனத்துடன் பராமரிப்பார்கள் என்கிற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது.

இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் எஸ்எம்எஸ் மூலம் மரக்கன்றுகள் பெற்றிருக்கிறார்கள்.

  "என் பெயர் மரம்' என்கிற பெயரில் சுற்றுச்சூழல் குறித்த விளம்பரம் ஒன்று செய்ய உள்ளோம். இந்த விளம்பரங்களை இயக்குநர் பாலுமகேந்திரா, பாடகிகள் மாலதி லட்சுமணன், ஸ்ரீலேகா, டென்னிஸ் வீராங்கனை சாய்லெட்சுமி ஆகியோரை வைத்து எடுத்துள்ளோம்.

  இதில் பாலுமகேந்திரா வீட்டில் எடுக்கப்பட்டபோது நெகிழ்ச்சியாக இருந்தது. அவர் என் பெயர் மரம் என்பதை என் பெயர் பூவரசு என்றார். அவருக்குப் பிடித்த மரம் பூவரச மரமாம். பூவரசன் இலையில் பீப்பி செய்து பாடி விளையாடி இருக்கிறோம். இப்போது சென்னையில் பூவரச மரத்தையே காணமுடியவில்லை என மிகவும் வருத்தப்பட்டுச் சொன்னார். அது உண்மையும்கூட. அதனால்தான் நாங்கள் வழங்குகற மரங்களில் பூவரச மரத்தையும் சேர்த்திருக்கிறோம்.

குறிப்பிட்ட இந்தப் பத்து மரங்களையும் வழங்குவதற்கு முக்கிய காரணம் இந்த மரங்கள் எல்லாம் ஆக்ஸிஜன் அதிகம் அளிக்கக் கூடிய மரங்கள் என்பதால். எதிர்காலத்தில் மரங்கள் அற்றுப் போனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையே மனிதர்களுக்கு ஏற்படலாம். இதை எல்லோரும் புரிந்துகொண்டு மரங்களை வளர்க்க முன் வர வேண்டும்.

எங்கள் அமைப்பில் சேர்வதற்கு எந்தவித தகுதியும் தேவையில்லை. மனம் மட்டும் இருந்தால் போதும். அது எப்படிப்பட்ட மனதாக இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். எங்கள் அமைப்பில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பையன் இருக்கிறார். அவர் எந்தக் கடைக்குப் போனாலும் ப்ளாஸ்டிக் கவரில் கொடுத்தால் வாங்கமாட்டார். துணிப் பையை உடன் எடுத்துச் சென்றுதான் வாங்குவார்.

அதைப்போல கடைக்குப் பொருள்கள் வாங்க வருபவர்களிடமும் ப்ளாஸ்டிக் கவரில் கொடுத்தால் வாங்காதீர்கள் என்று சொல்லி, அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய கேடுகளை விளக்குவார்கள். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டோரை ஃப்ளாஸ்டிக் கவரைப் பயன்படுத்தாத அளவிற்கு மாற்றியுள்ளார். அதைப்போல மனம் உள்ளவர்கள்தான் வேண்டும்'' என்றார் "சத்திய'மூர்த்தி!

மரக்கன்று பெற :  Green to 98940 62532


SMS A SAPLING
Just leave a SMS typed GREEN to the number +91 98940 62532 We will be knocking your door with a sapling with in 2 weeks.


Want a tree? Send an sms
Reference: Times of India

CHENNAI: In an attempt to make the city greener, Chennai Social Service a group of working professionals who use their weekends in social welfare acitivities has launched the SMS a sapling' concept.

Just their way of making planting a tree in your house as easy as possible. It's a simple enough process if you are interested in having a tree planted in your house, just sms 9894062532 or 9962673668. The volunteers at CSS will then work with you on what kind of tree you need or want and what arrangements you need to make for the planting and then within the week, they'll come over with the sapling.

"At our end, we have segregated the city into three zones," says B Satish, executive secretary of CSS. "And we are already in touch with nurseries and eco organizations across the city which have saplings ready for disposal. Most of the places give us the saplings for free," he adds.

CSS only plants shade-bearing and flower and fruit bearing trees. "We do not plant shrubs etc," says Satish. And all the trees are Indian species. "There's lots to choose from, says Satish. For instance, there's Poongan', propagated by the Forestry Department and which is a pest and animal repellent thanks to a bitter juice that its leaves give out. There's Pooarasan', which is a sub-species of the banyan and whose leaves make a whistling sound in the wind. The Ashoka tree is supposed to be a favourite for apartments that are near arterial roads because it manages to be a sound barrier. Then there's Badam', which has bright green leaves that turn progressively pinker as the tree gets older.

"The volunteers will bring all the equipment required to plant the tree as well as a leaflet on how to care for the sapling. But if the sapling being planted requires any special manure or soil, the house owner will have to bear that cost. Most of our saplings though can grow on any soil in Chennai," says Satish, who adds that CSS is in touch with Dr Srinivasan, a professor in the Horticulture Department of IIT Madras on type of saplings and maintenance.

SMS a sapling' is part of a CSS environment drive, which includes a documentary called En Per Maram' ( My name is tree'), shot by R Sathyamoorthy, who volunteers with the organisation. The documentary, which was also launched along with the SMS concept on Sunday, features a host of Chennai's celebrities such as tennis player Sai Jayalakshmi and director Balu Mahendra, asking people to help make the city a greener place. It will begin featuring soon on various television channels.

"When we plant the sapling at a house, we name the sapling after the owner of the house just to make them care more for it," says Satish.

Reporter: Kamini.mathai@timesgroup.com

புறம்போக்கு நிலங்களில் மரம் வளர்ப்பு: அரசுக்கு கோரிக்கை

செய்தி நாள்: 4-பிப்ரவரி-2010
 
காகித உற்பத்தித்தொழில் வளர்ச்சி பெற,​​ புறம்போக்கு நிலங்களில் மரங்களை வளர்க்க அரசு நீண்ட கால குத்தகை அனுமதியை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய காகிதக் கூழ் மற்றும் காகித தொழில்நுட்ப சங்கத்தின் ​(ஐ.பி.பி.டி.ஏ.)​ தலைவர் என்.பி.​ பிரபு மற்றும் சேஷசாயி பேப்பர் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் கே.எஸ்.​ காசி விஸ்வநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காகித உற்பத்தியில் 15வது இடத்தில் உள்ள இந்தியா விரைவில் சீனாவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தைப் பெறும்.​ இந்திய காகித ஆலைகளின் உற்பத்தித் திறன் 93 லட்சம் டன்.​ இதில் 89 லட்சம் டன் அளவு காகிதம் உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது.

நாட்டில் ஆண்டுதோறும் காகித விற்பனை அளவு ரூ.​ 25 ஆயிரம் கோடி ஆகும்.​ இந்தத் தொழில் மூலம் 5 லட்சம் மக்களுக்கு நேரடியாகவும்,​​ 11 லட்சம் மக்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

காகிதத்தின் தேவை அதிகரித்து வருவதால்,​​ அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த காகித உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கும்.​ இதற்காக ரூ.​ 10 ஆயிரம் கோடி முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது.​ செய்தித்தாள் காகிதத்தில் 60 சதவீதம் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உள்ளது.

தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி:​​ காகிதத் தொழிலுக்கு இப்போது உள்ள நெருக்கடியான பிரச்னை நார் நிறைந்த கச்சாப் பொருள்கள் பற்றாக்குறை ஆகும்.​ இதற்காக புறம்போக்கு நிலங்களில் மரங்களை வளர்க்க காகித ஆலைகளுக்கு நீண்டகால ஒப்பந்த அனுமதியை அரசு வழங்க வேண்டும்.​ இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.​ காகிதத் தொழில் வளர்ச்சி பெற தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

இன்று கருத்தரங்கு:​​ காகிதத் தொழில் எதிர்நோக்க உள்ள பல்வேறு சவால்கள் குறித்த தேசிய கருத்தரங்கு சென்னை தியாகராயநகரில் உள்ள ரெசிடென்சி டவர் ஹோட்டலில் 5,​ 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.இந்தக் கருத்தரங்கில் தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்தனர்.

Reference:
தினமணி

நாமக்கல் ஆட்சியர் சகாயம் - மரம் நடும் சேவை

செய்தி நாள்: 25-நவம்பர்-2010

மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும்.
-நாமக்கல் ஆட்சியர் சகாயம்.

Reference:
ஆனந்த விகடன்

பசுமை போர்வை திட்டம்

நாள்: 20-மார்ச்-2010

புவி வெப்பமயமாதலை தடுக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மாவட்டம் தோறும் தேர்வு செய்யப் பட்ட நான்கு பள்ளிகளில், 'பசுமை போர்வை' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.புவி வெப்பமயம்: தொழிற்சாலை கள், வாகன பெருக்கம் உட்பட பல்வேறு விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் புகை காரணமாக புவி வெப்பமயமாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை தடுக்க சுற்றுச்சூழல் துறை சார்பில் இயற்கை சார்ந்த பொருள்கள் அழியாமலும், புதுப்பிக்கவல்ல எரிசக்திகளை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது.புதிய திட்டம்: புவி வெப்ப மயமாதலை தடுக்கவும், கரியமிலவாயு தாக்கத்தை குறைக்கும் விதமாகவும் பள்ளிகளில், 'பசுமை போர்வை' என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இரண்டு உயர்நிலை, இரண்டு மேல்நிலைப்பள்ளிகள் தேர்வுசெய்யப்பட உள்ளன. தமிழகத்தில், சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்டத்திற்கு தலா ஒரு லட்சம் வீதம், 31 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதியில் பள்ளி வளாகத்தில் தேவையான மரக்கன்று களை நட்டு பாதுகாத்து வளர்க்கப்பட உள்ளன.இந்த கல்வியாண்டிலிருந்து ஆண்டுதோறும், ஒவ்வொரு மாவட்டத் திலும், நான்கு பள்ளிகளை தேர்வு செய்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான நிதி பயன்படுத்தும் விதம், திட்ட அறிக்கையை பள்ளிகளிடம் இருந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள் ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

Refernces
தினமலர்


Wednesday, March 17, 2010

தமிழ்நாட்டிற்கு ஏற்ற மர வகைகள்

இப்பகுதி, முன் அனுபம் இல்லாதவரால் எழுதப்பட்டது. தகவல் பிழைகள், மேம்பட்ட தகவல்களை பின்னூட்டத்தில்(Comments) தெரிவிக்கவும்.

வேப்ப மரம்
பயன்கள்
 • மரமிருக்கும் இடம் மிகவும் குளுமையாக இருக்கும்.
 • மரம் உறுதியானது. எளிதில் சாயாது.
 • அதிக வருடங்கள் உயிர் வாழும்.
மரம் வளர்ப்பதில் உள்ள சிக்கல்கள்:
 • மிகவும் மெதுவாக வளரும். நட்டு ஓரளவுக்கு உயரம் கொண்டுவரவே ஒரு வருடம் பிடிக்கும்.

அரச மரம்
பயன்கள்
 • இருபத்து நாலு மணிநேரமும் ஒளிச்சேர்க்கை செய்து ஆக்சிசன் வெளியிடும் ஒரே மரம்
 • அதனால்தானோ என்னவோ, அரசமரத்தைக்கும், ஆலமரத்துக்கும் நமது முன்னோர்கள் முக்கத்துவம் கொடுத்துள்ளார்கள்.
References
ஒரு ம‌ர‌ம் வீழ்ந்தால், இழ‌ப்பு 33இல‌ட்ச‌ ரூபாய்!

மரம் வளர்ப்பு சம்பந்தமாக நீங்கள் படிக்க வேண்டியவை

1.  மரம் வளர்த்தார்; குரோர்பதி ஆனார்! - ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!
2. மரம் ஒரு வரம்  - மரம் வளர்க்க ஒரு யோசனை
3. Projects and Programs - தமிழ்நாடு அரசு வனத்துறையின் தற்போதைய மரம் வளர்ப்பு திட்டங்கள்
4. காந்திகிராம பல்கலைக்கழகத்தின் விவசாய தகவல் நிலையம்  - http://www.ruraluniv.ac.in/cika.pdf
5. நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - தினமணி கதிர் தொடர்
6. மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - விகடன் பிரசுர வெளியீடு


Tuesday, March 16, 2010

தாத்தா சொல்றேன் நாம மரம் நட்டா என்ன?

ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் ஒரு 2 மரக்கன்னு நட்டாக்கூட, வருசத்துக்கு நூத்தி நாலு மரம் நடலாம்.

என்னா ஒரு அரமணி நேரம் செலவாவுமா? ஆனா நாம நடறது இல்ல.
நம்ம குழந்தைகளுக்கு மரம் நட்டு வெளையாடறது எவ்ளோ சந்தோசம் தெரியுமா? உங்க குழந்தைய கூட்டி போயி மரம் நடுங்க. அதுங்க எவ்ளோ குசியா அத பாக்குங்க தெரியுங்களா?

சரி, இதே மாதிரி ஒரு பத்து வருசம் நட்டாக்கூட, ஆயிரத்து நாப்பது மரம் ஆயிருக்கும். எவளோ காசு வெச்சுருந்தாலும் அத எண்ணி பாக்குறதவிட, நாம நட்ட மரங்கள பாத்து பாத்து பூரிப்படையிரதுல இருக்குற சந்தோசம் அதிகமுங்க.

ஞாயித்துக்கிழமை, ஞாயித்துக்கிழமை ரெண்டு மரம்ன்னா, எவ்ளோ பெருசா செலவாயிரும்முன்னு நெனக்கிறீங்க.

ஒரு மரக்கன்னு, பத்து ரூவான்னாக்கூட, வாரத்துக்கு இருபது ரூவா, மாசத்துக்கு எம்பது ரூபா, வருசத்துக்கு ஐநூத்தி பத்து ரூபா. ரெண்டு மாசம் கேபிள் டீவிக்கு ஆவுற செலவு.

அட, மரக்கன்னுக்கு ஆகற செலவ விடுங்கப்பா, வேற என்ன செலவு ஆகும்.

உங்க குழந்தக்கிட்ட தண்ணி வூத்தறதுக்கு ஒரு குடுவை வாங்கிக் குடுங்க. அதுங்க மரக்கன்னுக்கு தண்ணி ஊத்தற பாத்து ரசியிங்க. என்ன ஒரு குடுவைக்கு ஒரு நூரு ருபா செலவாகுமா? இன்னக்கி, ஒரு வெளயாட்டு சாமான் என்ன காசாவுது? வெளயாட்டு சாமானோட வெளயாட்டு சாமானா, இதுவும் இருந்துட்டு போகட்டுமே?

தண்ணி செலவு, ஒரு மரத்துக்கு இரண்டு நாளைக்கு ஒரு கப்பு தண்ணினா ஒரு இருபது மரத்துக்கு ஐஞ்சு குடுவ தண்ணி தேவப்படும், அத ஊத்தறக்கு ஒரு அரைமணி நேரம் ஆகும். வருசக்கடைசில ஒரு நூத்தி இருபது மரம் ஆயிருக்கும். அப்ப ஒரு நாலு பேத்த கூட சேட்துக்குங்க. இல்ல மரம் நட்டு இருக்கற இடத்துக்கு பக்கத்துல இருக்கற வீட்டுக்காறங்கள தண்ணி ஊத்தி பாத்துக்க சொல்லுங்க.

மரம் வைக்கறதுக்கு குழி வெட்டனுமுள்ள? அதுக்கு ஒரு கடப்பாரை, ஒரு மம்முட்டி இது போதும், சின்ன கடப்பாரை நூரு ருபா, மம்முட்டி ஒரு நூரு ருபா ஆக மொத்தம் ஒரு இருநூறு ருபா. இது ஒரே ஒரு தரவ செலவுதான்.

இத இப்படியே ஒரு பத்து பேரு இப்படி பண்ணுனாக்கூட, வருசத்துக்கு ஒரு ஆயிரத்து நாப்பது மரம் ஆயிருக்காது. என்ன சொல்லுறீங்க.

அதெல்லாம் கரெக்ட்டுங்க. மரத்த எங்க போயி நடறது. எங்க வீதில நடக்கறதுக்கே இடம் இல்ல. இதுல மரம் எங்க போயி நடறது. எங்க எங்கெல்லாம் மரம் நடலாம்ன்னா,
1. முக்கியாமா பள்ளிகூடங்கள சுத்தி நடலாம்.
2. இரண்டாவது, கோயிலுங்கள சுத்தி நடலாம்
3. மூணாவது மலை எல்லாம் இருந்துச்சுன்னா, அதுங்கள சுத்தி நடலாம்.
4. அப்புறம் நம்ம வீதியிலயே நடலாம். இதுதான் நமக்கு பாத்துக்குறதுக்கு, தண்ணி ஊத்தறதுக்கெல்லாம் சவுரியமுங்கூட.

சரிதான், இந்த மரக்கன்னு எங்க எங்கெல்லாம் கெடைக்குது? இல்ல எப்படி தயாரிக்கறது? விதை போட்டா வராதா?


.