Monday, March 22, 2010

மரக்கன்று நடுதல், மரம் வளர்ப்பு - சிறு தகவல்கள் 1

இப்பகுதி, முன் அனுபம் இல்லாதவரால் எழுதப்பட்டது. தகவல் பிழைகள், மேம்பட்ட தகவல்களை பின்னூட்டத்தில்(Comments) தெரிவிக்கவும்.

மரக்கன்று நட ஏற்ற காலப்பருவம் எது? எப்போ வேண்டுமானாலும் மரத்த நட்டு வளர்க்க முடியுமா?
எப்போ வேண்டுமானாலும் மரக்கன்று நட்டு வளர்க்கலாம். ஆனா மரக்கன்றுகள் ஓரளவுக்கு பெரியதாக வளரும் வரை, வெயில், மழை மற்றும் குளிர் காலங்களில் அந்த அந்த காலத்திற்கு ஏற்ப சில ஏற்பாடுகளையும் பராமரிப்பு பணிகளையும் மேற்க்கொள்ள வேண்டும்.

நான் இப்பொழுதுதான் மரக்கன்று நட்டுள்ளேன். வெயில் காலத்தில் என்னென்ன பிரச்சனைகள் வரும்? அவற்றை சமாளிப்பது எப்படி?
வெயில் காலத்தில் மனிதனாகிய நமக்கு என்ன ஆகிறது. வெயில் சுட்டெரிக்கிறது. ஒரு ஐந்து நிமிடம் வெயிலில் நின்றாலே, தலை எரிகிறது. தலையே வெந்துவிடும் போலிருக்கிறது. உடனே மரமிருக்கும் இடமாக பார்த்து அதனடியில் நின்று கொள்கிறோம்.
பாவம் கொளுத்தும் வெயிலில் மரக்கன்று நின்றால என்னவாகும்? கருகிவிடாது.
எனவே, மரக்கன்றுக்கு ஒரு மூடாக்கு போடலாம். தென்னம் மட்டைகளை கூம்பு போல மரக்கன்றை சுற்றி கட்டி வைக்கலாம்.

அப்புறம் என்னாகும். வெயில்னால பூமியோட மேற்பரப்பு மண்ல இருக்கற ஈரப்பதம் எல்லாம் ஆவியாயிரும். ஒரு முழங்கால் அடி மண்ணை தோண்டினாதான் ஈரமண்ணையே பாக்க முடியும். மரக்கன்னுனால ஒரு முழங்கால் அடி வேர உடமுடியுமா? ஒரு விரலளவு ஆழந்தான் வேர் வளந்துருக்கும்.
அதனால ஒரு ரெண்டு நாளைக்கு ஒருதடவ கொஞ்சம் கொஞ்சம் தண்ணி ஊத்தனும்.

மழைக்காலத்தில் என்னென்ன பிரச்சனைகள் வரும்? அவற்றை சமாளிப்பது எப்படி?
சரிவான இடத்தில் மரக்கன்று இருந்தால் மழை நீரில் அடித்து சென்று விடும். எனவே நீர் வழிந்தோடும் பாதையை விட்டு சற்று ஒதுக்குபுறமாக மரக்கன்று நடவேண்டும்.
இதைத் தவிர வேறு ஒன்றும் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. மழைக்காலம் தொடக்கத்திலும், முடிவிலும்  கொஞ்சம் கொஞ்சம் தண்ணி ஊத்தனும்.
மற்றபடி அதிக நீர்த்தேவையும் இருக்காது. அதிக பராமரிப்பும் தேவைப்படாது.


குளிர்க்காலத்தில் என்னென்ன பிரச்சனைகள் வரும்? அவற்றை சமாளிப்பது எப்படி?
குளிர்க்காலத்துல பனி அதிகமா இருந்துச்சுன்னா, சிறு மரக்கன்றுகளோட தலை, அதாவது குருத்து இலைகள் கருகிவிடும். அதனால இப்பவும் வெயில் காலத்துல போடுற அதே மாதிரி மூடாக்கு போடலாம்.
மத்தப்படி அப்ப அப்ப கொஞ்சம் தண்ணி ஊத்தனும்.



நம்ம ஊரில், தமிழ்நாட்டில் எந்தெந்த மாதங்களில் வெயில், குளிர், மழைக்காலம்?
வெயில் காலம் - மார்ச் மாசம் தொடங்கி ஜூன் மாசக்கடைசி வரை நாலு மாசம்.
மழை காலம் - ஜூலை மாசம் தொடங்கி அக்டோபர் மாசம் முடிய
குளிர்/பனி காலம்  - நவம்பர் மாசம் தொடங்கி பிப்ரவரி முடிய



விதை போட்டு மரம் வளர்க்கலாமா? இல்லை பதியம் போட்டு மரம் வளர்க்கலாமா? இல்லை நர்சரியிலிருந்து வாங்கி வந்து நடலாமா?



எனக்கெல்லாம் நேரமில்லை. மாதத்திற்கே கொஞ்ச நேரம் தான் செலவிட முடியும். So, குறைந்த பராமரிப்பு தான் செய்யமுடியும் என்றால் எப்ப மரக்கன்று நடலாம்?
அப்படின்னா, மழைக்காலதோட தொடக்கதுல இருந்து மழைக்காலம் முழுவதும் மரம் நடுவது சிறந்தது. மண்ணுல ஈரப்பதம் அதிகம் இருக்கும். தண்ணியும் அதிகமா ஊத்த தேவையில்ல.












0 comments:

Post a Comment