Monday, March 22, 2010

மரக்கன்று நடுதல், மரம் வளர்ப்பு - சிறு தகவல்கள் 2

இப்பகுதி, முன் அனுபம் இல்லாதவரால் எழுதப்பட்டது. தகவல் பிழைகள், மேம்பட்ட தகவல்களை பின்னூட்டத்தில்(Comments) தெரிவிக்கவும்.

மரக்கன்று நட்டு வளர்ப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்துக்கொள்ள நினைக்கிறேன். எப்படி தொடங்குவது? என்ன வழி முறை?
இப்படித்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. போகிற போக்கில் உங்கள் வீட்டு வாசலில் ஒரு மரக்கன்று நடலாம். அவ்வப்போது தண்ணீர் ஊற்றலாம். அவ்வளவே மரம் வளர்ப்பு.
பூச்செடி வளர்ப்பதும் மரம் வளர்ப்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். மரக்கன்று வாங்குங்கள். வாசலில் வையுங்கள். அவ்வப்போது தண்ணீர் ஊற்றுங்கள்.

அதன் வளர்ச்சியை பார்த்து அப்படியே உங்கள் உள்ளம் பூரிக்கும். பிறகு இரண்டு, மூன்று மரம் என்று அதிகரித்து செல்லுங்கள்.

நாங்கள் நான்கு பேர் கொண்ட ஒரு குழு. நாங்கள் என்ன செய்யலாம்?
சின்ன வயதில சிங்கம்-மாடுகள் கதை கேட்டிருப்போம். கதையை விட்டுவிடுவோம், கதைக்கருவை எடுத்துக்கொள்வோம். தனி மனிதனை விட ஒரு குழுவாக இருந்தால் கொஞ்சம் பெரிய அளவில் வேலை செய்யலாம். சாதிக்கலாம். ஒருவர் போனாலும், மற்றவர்களால் தொடங்கிய வேலை தொடர்ந்து நடக்கும்.

ஒரு குழு எனும் போது, சிறிய செயல் திட்டம் ஒன்று தேவை. அது பின்வருமாறு.

1. பதியம் போட்டு மரக்கன்று வளர்த்தல்

2. மரக்கன்று நடுவதற்கான இடத்தை தேர்ந்தெடுத்தல்

3. மரக்கன்று நடுவதற்கான இடத்தை தயார்படுத்துதல்
  • அரை முழங்கை ஆழத்திற்கும், அரை அல்லது முழு முழங்கை அகலத்திற்கும் மண்வெட்டியால் குழி வெட்டுங்கள்.
  • வெட்டும் போது மண் கட்டியாக வந்தால், அதை உடைத்து தூள் செய்து கொள்ளுங்கள்
  • குழியின் அடி அழத்தில் கொஞ்சம் காய்ந்த இலை தழைகளை போடுங்கள். பிறகு சிறிது மண்ணை தூவி இலை தழைகளை மூடுங்கள்.

4. மரக்கன்று நடுதல்
  • பிறகு மரக்கன்றை குழியில் வைத்து, சுற்றிழும் மண்ணை போட்டு மூடுங்கள். மரக்கன்றை சுற்றி மண்ணை போட்டு அமுக்காதீர்கள், மண் பொது பொதுவென்று இருக்க வேண்டும்.
  • எல்லா மண்ணையும் போட்டு கன்றை சுற்றி மேடாக்கி விடாதீர்கள். சுற்றுபுறத்தை விட சற்று குழியாக இருக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர் தேங்கி நிற்க வசதியாக இருக்கும்.
  • பின் மரக்கன்றை சுற்றி தண்ணீர் ஊற்றுங்கள்.
  • பிறகு மரக்கன்றை சுற்றி காய்ந்த இலை தழைகளை போட்டு மூடி வையுங்கள். இவை ஈரம் சீக்கிரம் காய்ந்து போகாமல் தடுக்கும்.

5. சிறிய அளவில் பாதுகாப்பை ஏற்படுத்துதல்

6. முதல் வார பாராமரிப்பு மற்றும் கண்காணிப்பு
மரக்கன்று நட்டு,
  • முதல் ஒன்பது நாட்களுக்கு, மூன்று தினங்களுக்கு ஒரு முறை நீர் விடுங்கள்

7. 2, 3, 4 ஆம் வார பாராமரிப்பு மற்றும் கண்காணிப்பு
  • பிற்கு மூன்று மாததிற்கு வாரத்திற்கு ஒரு முறை நீர் விடுங்கள்.


மேலும் சில தகவல்கள்:
எளிதில் மரம் வளர்க்க சில உத்திகள்


0 comments:

Post a Comment