Tuesday, March 16, 2010

தாத்தா சொல்றேன் நாம மரம் நட்டா என்ன?

ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் ஒரு 2 மரக்கன்னு நட்டாக்கூட, வருசத்துக்கு நூத்தி நாலு மரம் நடலாம்.

என்னா ஒரு அரமணி நேரம் செலவாவுமா? ஆனா நாம நடறது இல்ல.
நம்ம குழந்தைகளுக்கு மரம் நட்டு வெளையாடறது எவ்ளோ சந்தோசம் தெரியுமா? உங்க குழந்தைய கூட்டி போயி மரம் நடுங்க. அதுங்க எவ்ளோ குசியா அத பாக்குங்க தெரியுங்களா?

சரி, இதே மாதிரி ஒரு பத்து வருசம் நட்டாக்கூட, ஆயிரத்து நாப்பது மரம் ஆயிருக்கும். எவளோ காசு வெச்சுருந்தாலும் அத எண்ணி பாக்குறதவிட, நாம நட்ட மரங்கள பாத்து பாத்து பூரிப்படையிரதுல இருக்குற சந்தோசம் அதிகமுங்க.

ஞாயித்துக்கிழமை, ஞாயித்துக்கிழமை ரெண்டு மரம்ன்னா, எவ்ளோ பெருசா செலவாயிரும்முன்னு நெனக்கிறீங்க.

ஒரு மரக்கன்னு, பத்து ரூவான்னாக்கூட, வாரத்துக்கு இருபது ரூவா, மாசத்துக்கு எம்பது ரூபா, வருசத்துக்கு ஐநூத்தி பத்து ரூபா. ரெண்டு மாசம் கேபிள் டீவிக்கு ஆவுற செலவு.

அட, மரக்கன்னுக்கு ஆகற செலவ விடுங்கப்பா, வேற என்ன செலவு ஆகும்.

உங்க குழந்தக்கிட்ட தண்ணி வூத்தறதுக்கு ஒரு குடுவை வாங்கிக் குடுங்க. அதுங்க மரக்கன்னுக்கு தண்ணி ஊத்தற பாத்து ரசியிங்க. என்ன ஒரு குடுவைக்கு ஒரு நூரு ருபா செலவாகுமா? இன்னக்கி, ஒரு வெளயாட்டு சாமான் என்ன காசாவுது? வெளயாட்டு சாமானோட வெளயாட்டு சாமானா, இதுவும் இருந்துட்டு போகட்டுமே?

தண்ணி செலவு, ஒரு மரத்துக்கு இரண்டு நாளைக்கு ஒரு கப்பு தண்ணினா ஒரு இருபது மரத்துக்கு ஐஞ்சு குடுவ தண்ணி தேவப்படும், அத ஊத்தறக்கு ஒரு அரைமணி நேரம் ஆகும். வருசக்கடைசில ஒரு நூத்தி இருபது மரம் ஆயிருக்கும். அப்ப ஒரு நாலு பேத்த கூட சேட்துக்குங்க. இல்ல மரம் நட்டு இருக்கற இடத்துக்கு பக்கத்துல இருக்கற வீட்டுக்காறங்கள தண்ணி ஊத்தி பாத்துக்க சொல்லுங்க.

மரம் வைக்கறதுக்கு குழி வெட்டனுமுள்ள? அதுக்கு ஒரு கடப்பாரை, ஒரு மம்முட்டி இது போதும், சின்ன கடப்பாரை நூரு ருபா, மம்முட்டி ஒரு நூரு ருபா ஆக மொத்தம் ஒரு இருநூறு ருபா. இது ஒரே ஒரு தரவ செலவுதான்.

இத இப்படியே ஒரு பத்து பேரு இப்படி பண்ணுனாக்கூட, வருசத்துக்கு ஒரு ஆயிரத்து நாப்பது மரம் ஆயிருக்காது. என்ன சொல்லுறீங்க.

அதெல்லாம் கரெக்ட்டுங்க. மரத்த எங்க போயி நடறது. எங்க வீதில நடக்கறதுக்கே இடம் இல்ல. இதுல மரம் எங்க போயி நடறது. எங்க எங்கெல்லாம் மரம் நடலாம்ன்னா,
1. முக்கியாமா பள்ளிகூடங்கள சுத்தி நடலாம்.
2. இரண்டாவது, கோயிலுங்கள சுத்தி நடலாம்
3. மூணாவது மலை எல்லாம் இருந்துச்சுன்னா, அதுங்கள சுத்தி நடலாம்.
4. அப்புறம் நம்ம வீதியிலயே நடலாம். இதுதான் நமக்கு பாத்துக்குறதுக்கு, தண்ணி ஊத்தறதுக்கெல்லாம் சவுரியமுங்கூட.

சரிதான், இந்த மரக்கன்னு எங்க எங்கெல்லாம் கெடைக்குது? இல்ல எப்படி தயாரிக்கறது? விதை போட்டா வராதா?


.

0 comments:

Post a Comment